அமெரிக்காவின் யலோ ஸ்டோன் தேசிய பூங்காவில் (Yellow Stone National Park) இல் தான் உலகில் மிக ஆபத்தான எரிமலைகளின் தொகுதி அமைந்துள்ளது.
இந்த சூப்பர் எரிமலை வெடித்துச் சிதறினால் அது 1980 இல் வெடித்துச் சிதறிய மௌண்ட் ஹெலென் என்ற சக்தி வாய்ந்த எரிமலையை விட 1000 மடங்கு வீரியமானதாக இருக்கும் என்று கூறும் புவியியலாளர்கள் அதற்கான சாத்தியம் குறைவாகவே உள்ளதாகவும் ஆறுதல் தெரிவித்துள்ளனர். கடல் மட்டத்தில் இருந்து 9 மைல் ஆழத்தில் குறித்த அதிர்வுகளைப் பதிவு செய்துள்ளதாகக் கூறும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான USGS தொடர்ந்து Yellow Stone தேசியப் பூங்காவில் ஏற்பட்டு வரும் அதிர்வுகளை அளவீடு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.