கொலஸ்ட்ரோல் அற்ற முட்டை அறிமுகம்!!

பொலனறுவையில் கொலஸ்ட்ரோல் அற்ற முட்டை வகையொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பொலனறுவை மஹாவலி விவசாயிகளினால் இந்த முட்டை வகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உடலுக்கு தீங்கு இழைக்காத கெட்ட கொழுப்பு அற்ற விசேட வகை முட்டை ஒன்றை மஹாவலி பி வலய விவசாயக் குடும்பங்கள் அறிமுகம் செய்துள்ளன.

கோழிகளுக்கு வழங்கப்படும் உணவில் மாற்றத்தைச் செய்வதன் மூலம் கொலஸ்ட்ரோல் அற்ற முட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என கூறப்படுகின்றது.

சிவப்பு பச்சை அரிசியின் சத்துடைய உணவு வகைகளை கோழிகளுக்கு வழங்குவதனால் இவ்வாறான முட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த உணவு வகைகளில் மொனொலிக் -கே என்ற வகை இரசாயனம் கட்டுப்படுத்தப்படுகின்றது எனவும் ஒரு முட்டை 50 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த வகை முட்டையை சர்வதேச சந்தைக்கு அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மஹாவலி அபிவிருத்தி அமைச்சின் அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.