நூற்றுக்கணக்கான மனித மண்டை ஓடுகளால் கட்டப்பட்ட கோபுரம் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்

M

மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான மனித மண்டை ஓடுகளால் வட்ட வடிவ கோபுரம் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மெக்சிகோ தலைநகரில் பழங்கால Aztec கோவில் அமைந்துள்ள பகுதியில் ஆய்வாளர்கள் மேற்கொண்ட தேடுதலில் 676 மனித மண்டை ஓடுகளாலான கோபுரம் ஒன்றை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது மாயன் வம்ச காலகட்டத்தில் நரபலி கலாச்சாரம் இருந்துள்ளதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Aztecs மற்றும் Mesoamerican மக்கள் சூரிய கடவுளுக்கு நரபலி அளித்து வந்துள்ளது வரலாற்றாசிரியர்களால் நிறுவப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மண்டை ஓடுகளால் ஆன கோபுரமானது ஸ்பெயின் நாட்டவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து அப்போதைய குடிமக்களை காக்கும் பொருட்டு குறித்த கோபுரத்தை அமைத்திருக்கலாம் என வரலாற்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் கண்டெடுக்கப்பட்டுள்ள மண்டை ஓடுகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் ஒரு மண்டை ஓடு மட்டும் ஸ்பானியர் ஒருவரது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மண்டை ஓடு கோபுரம் கண்டெடுக்கப்பட்ட பகுதியை ஆய்வாளர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்தே ஆய்வுக்கு உட்படுத்தி வந்துள்ளனர்.