அண்ணன் தங்கை வெட்டிக்கொலை!

killed

சென்னை பள்ளிக்கரணை அருகே குடும்பத்தகராறு காரணமாக அண்ணன், தங்கை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை சாயிபாபா நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் குடும்ப தகராறு காரணமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த ஒருவர் அண்ணனையும் தங்கையும் அரிவாளால் வெட்டி சாய்த்துள்ளார்.

இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் வெட்டியவரை தடுக்க வந்த மற்றொருவரையும் வெட்டி விட்டு அந்த கொலையாளி அங்கிருந்து தப்பி சென்றார்.

தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்தவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.