75000 ரூபா லஞ்சம் பெற்றுக் கொண்ட மருத்துவர்!

75000 ரூபா லஞ்சம் பெற்றுக் கொண்டதாக குளியாப்பிட்டி மருத்துவர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு பிரிவில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆய்வு கூட பரிசோதனைகளை வழங்குதவற்காக மருத்துவ நிபுணர் ஒருவர் மதாந்தம் தலா 25000 ரூபா என்ற அடிப்படையில் மூன்று மாதங்களுக்கு லஞ்சம் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தனியார் மருத்துவ ஆய்வு கூடமொன்றிடமிருந்து இவ்வாறு லஞ்சம் பெற்றுக் கொண்டுள்ளார். குறித்த தனியார் மருத்துவ ஆய்வு கூடத்தின் அறிக்கைகளை ஏற்றுக் கொள்வதற்கு இவ்வாறு லஞ்சம் பெற்றுக் கொண்டுள்ளார்.

லஞ்சம் வழங்கத் தவறினால் அறிக்கைகளை நிராகரிக்கப் போவதாக மருத்துவர் எச்சரிக்கை விடுத்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.