விடுதலையாவாரா சசிகலா? தொண்டர்கள் சிறப்பு பூஜை

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து முழுவதுமாக விடுவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் சசிகலா, இளவரசி ஆகியோர் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்ததால், பெங்களூர் நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தங்களுக்கு வழங்கப்பட்ட நான்கு வருட சிறைத் தண்டனையை மறுசீராய்வு செய்ய உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பினர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

வழக்கிலிருந்து முழுவதுமாக விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மறு சீராய்வு மனு மீதான விசாரணை 6-ம் திகதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து சசிகலா வெளியே வர தொண்டர்கள் தொடர் யாகங்களை நடத்தி வருகிறார்களாம்.