கண்ணில் புரை காரணமாக திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மு.க.ஸ்டாலினுக்கு கடந்த சில தினங்களாக கண்ணில் பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இதுதொடர்பாக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், கண் சிகிச்சைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தி.மு.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.