மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நீண்ட காலமாக பணி புரிந்துவந்த தினேஷ்குமார் என்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொத்தமான எஸ்டேட் ஒன்று அமைத்துள்ளது. இந்த இடத்தில் தான் ஜெயலலிதா ஓய்வு எடுத்துக்கொள்வார்.
அவர் உயிருடன் இருக்கும் போதே இந்த எஸ்டேட் குறித்து பல்வேறு மர்மமான கருத்துகள் கூறப்பட்டது உண்டு.
இந்தநிலையில் ஜெயலலிதா கடந்தாண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்தார். இதனைதொடர்ந்து ஏப்ரல் 24 ஆம் திகதி கோடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கனகராஜ் மற்றும் சயான் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் விபத்தில் சிக்கினர். இதில் கனகராஜ் இறந்து போனார்.
இந்த களேபரங்களுக்கு இடையே தற்போது குறித்த எஸ்டேட்டில் கணக்காளராக பணியாற்றி வரும் தினேஷ்குமார் (22) என்பவர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே காவலாளி ஒருவரும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.