ஒரே நாடு, ஒரே வரி! அப்படித்தான சொன்னங்க அப்பறம் எது SGST, CGST-ன்னு ரெண்டு? இந்த குழப்பம் இல்லாத இந்தியனை நீங்க கண்டுப்புடிச்சுட்டா உங்களுக்கான பரிசு தொகை ரூ. ஒரு கோடி. இப்படி கூட விளம்பரம் வரலாம்.
ஏன்னா அவ்வளவு குழப்பத்தோட தான் ஒவ்வொரு இந்தியனும் வாழ்ந்துட்டு வராங்க. ஒருவேளை நம்ம இந்திய திருநாடு இன்றிலிருந்து 20,000நாட்கள் கழித்து எப்படி இருக்கும்? (அதென்ன 20,000 நாள்?ன்னு கேள்வி கேட்காதிங்க. எல்லாமே கற்பனை தான்.) வித்தியாச, வித்தியாசமான வரி, பிரதமர் அடுத்து எங்க பயணம் செய்வார்?, எந்த நடிகர் நிலை எப்படி இருக்கும்? இது முழுக்க, முழுக்க கற்பனையே…
1) புது இந்திய 786 வது முறையாக…… இல்லை, இல்லை இதை சில காவியர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். 789வது முறையாக புதிய இந்தியா பிறந்திருக்கும்.
2) ரூ.5 மதிப்புள்ள இட்லியை வார்டு, தொகுதி, நகர், மாநகர், மாநில, தேசிய ஜி.எஸ்.டி வரிகள் செலுத்தி ஏழை எளிய மக்கள் ரூ. 50 க்கு சாப்பிட்டு கொண்டிருப்பார்க்கள்.
3) வீட்டில் சமைத்து சாப்பிட, இரவு உறங்கி காலை எழ இந்திய மகாஜனங்களிடம் இருந்து குறைந்த அளவில் வரி வசூலிக்கப்படும்.
4) வீட்டில் இருந்து வெளியே வந்து தெரு விளக்கின் வெளிச்சத்தை பயன்படுத்திய மக்களுக்கு, அவர்களது முதுகில் பதியப்பட்ட சென்சார் மூலம் எவ்வளவு மின்சாரத்தை பயன்படுத்தக் கொண்டனர் என கணக்கிடப்பட்டு அவர்களது மின்சார கட்டணத்தில் கூடுதல் பணம் வசூலிக்கப்படும்.
5) சென்ற ஐந்து வருடங்களாக அரிசி விளைச்சல் இல்லாததால் சீனாவில் இருந்து அரசி இறக்குமதி செய்தது இந்தியா. மேலும், இந்த அரிசி (பிளாஸ்டிக்) பசியை குறைக்கும், வாரத்திற்கு ஒருமுறை மட்டும் சாப்பிட்டால் போதுமானது. (செரிமானத்தை சீர்குலைக்கும்., உயிரை எளிதில் பறிக்கும்.)
6) இந்தியாவின் அனைத்து சங்கங்களின் தலைவர் பொறுப்பு ஏற்று புதிய கின்னஸ் உலக சாதனை படைத்தார் நடிகர் விஷால்.
7) தமிழ் ராக்கர்ஸ் தங்கள் டொமைனை 5983127வது முறையாக “.fk” விற்கு மாற்றினார்.
8) பத்து ஆண்டுகளுக்கு பிறகு சென்னை பாலைவன பகுதியில் மழை பெய்தது. சேமிக்க நீர்நிலைகள் பராமரிக்கப்படாததால் சூரிய பகவான் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சிவிட்டார்.
9) பக்கத்து சூரிய குடும்பத்தின் அதிபரை கண்டு 50 நலத்திட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்து. பிரதமர் அடுத்ததாக மில்கிவே கடந்து பயணிக்கவுள்ளதாகவும், இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இந்தியா திரும்புவார் என்றும் பிரதமர் ட்விட்டர் அக்கவுண்டில் செய்தி வெளியாகியுள்ளது.