தேரர் கைது..!

யுவதி ஒரு­வரை தாக்­கிய சம்­ப­வம் தொடர்பில் பிரி­வெனா ஒன்றில் பயிலும் தேரர் ஒரு­வ­ரை கைது செய்­துள்­ள­தாக கொபெய்­கனே பொலிஸார் தெரி­வித்­தனர்.

கொபெய்­கனே பிர­தே­சத்­திற்கு அண்­மையில் அமைந்­துள்ள பிரி­வெ­னாவில் கற்று வந்த 19 வய­து­டைய இளம் தேரர் ஒரு­வரே இவ்­வாறு 18 வய­து­டைய யுவ­தியை தாக்­கி­யுள்­ள­துடன் அவ­ளது கைப்­பே­சி­யையும் உடைத்து நொறுக்­கி­யுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­ற­து.

குறித்த தேரரால் தாக்­கப்­பட்ட யுவ­தியோடு தொடர்­பை ஏற்­ப­டுத்தி கொண்­டி­ருந்த நிலையில் இரு­வ­ருக்கும் இடையில் ஏற்­பட்ட பிரச்­சினை ஒன்றின் கார­ண­மாக குறித்த யுவதி பணி­யாற்றும் இடத்­திற்கு சென்­றுள்ள தேரர் அவளை தாக்கி அவ­­ளி­ட­மி­ருந்த சுமார் இரு­பத்தையா­யிரம் ரூபாய் பெறு­ம­தி­யான கைப்­பே­சி­யையும் தரையில் அடித்து நொறுக்­கி­யுள்­ள­தா­கவும் மேற்­கொள்­ளப்­பட்ட ஆரம்­ப­கட்­ட விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரி­ய ­வந்­துள்­ள­தாகவும் பொலிஸார் தெரி­வித்­த­னர்.