எதுவானாலும் அம்மாவிடமே பேசிக்கொள்ளுங்கள் எனக்கு எதுவுமே தெரியாது – கயல் ஆனந்தி

சினிமாவில் நடிக்க வந்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் வரை திரிஷா சம்பந்தப்பட்ட அனைத்து விசயங்கள் குறித்தும் அவரது அம்மா உமா கிருஷ்ணனே முடிவெடுத்து வந்தார். கதை கேட்டாலும், சரி, சம்பளம் பேசினாலும் சரி எந்த பிரச்சினையையும் தான் எதிர்கொள்ளாமல் அம்மாவையே கை காட்டி விட்டு வந்தார் திரிஷா.

ஆனால் அப்படி இருந்தவர், ராணாவுடனான காதல் தோல்வி, தனது திருமணம் நிச்சயதார்த்தத்தோடு நின்று போனது ஆகிய சம்பவங்களுக்குப்பிறகு ரொம்பவே மெச்சூரிட்டியாகி விட்டார் திரிஷா.

சமீபகாலமாக திரிஷா நடித்து வரும் படங்கள் விசயத்தில் அவர் தனது அம்மாவை தலையிட விடுவதில்லை. தானே டீல் பண்ணுகிறார். அதேபோல் அவுட்டோர்களுக்கு அம்மா துணை இல்லாமல் தான் மட்டுமே விசிட் அடித்து வருகிறார். அந்த அளவுக்கு தைரியசாலியாகவும் மாறி விட்டார் திரிஷா.

இந்நிலையில், திரிஷா ஆரம்ப காலத்தில் இருந்தது மாதிரியே தற்போது கயல் ஆனந்தியும் செயல்பட்டு வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் டைரக்டர்கள் சொல்வதைக்கேட்டு நடிப்பதோடு சரி, மற்றபடி எந்த விசயத்தையும் தனது காதிலேயே அவர் வாங்கிக்கொள்வதில்லை.

படம் சம்பந்தமாக யாராவது ஏதாவது பேசினால், எதுவானாலும் அம்மாவிடமே பேசிக்கொள்ளுங்கள் எனக்கு எதுவுமே தெரியாது என்று கழன்று விடுகிறார் ஆனந்தி. முக்கியமாக, அவரை ஸ்பாட்டில் யாராவது கலாய்த்தாலும் அதற்கு ஆனந்தி பதில் கொடுப்பதில்லை. அவர் சார்பில் அவர் அம்மாதான் மகளை கலாய்த்தவர்களுக்கு பதிலடி கொடுக்கிறார்.