ஜோடி சேர்ந்த கபாலி பட நடிகர்கள்

ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘கபாலி’ படத்தில் விஸ்வாந்த், ரித்விகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் தற்போது ஒரு புதிய படத்தில் கதாநாயகன், கதாநாயகியாக மாறியிருக்கிறார்கள். இவர்கள் நடிக்கும் அந்த படத்தை ஜே.பி.ஆர். என்பவர் இயக்குகிறார். இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.

இப்படத்தில் விஷாந்த் படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞனாக நடிக்கிறாராம். நாயகி ரித்விகா மிகப்பெரிய தொழிலதிபரின் மகளாக நடிக்கிறாராம். இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். மாறுபட்ட கதைக்களத்தோடு திரில்லரும், எதிர்பாராத திருப்பங்களும் கூடிய கதையாக உருவாகவுள்ளது.

விஷாந்த், ரித்விகா இரண்டு பேருமே பா.ரஞ்சித்தால் படங்கள் மூலம் பிரபலமானவர்கள். இதுவரை இருவரும் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தாலும், முதன்முதலாக கதநாயகன், கதாநாயகியாக ஏற்று நடிக்கவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.