ஜுலை 1-ஆம் தேதி முதல் மத்திய அரசு ஜி.எஸ்.டி. என்ற பெயரில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரிய நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் ரூ.100-க்கு உட்பட்ட சினிமா டிக்கெட்களுக்கு 18 சதவீத வரியும், ரூ.100க்கு அதிகமாக விற்கப்படும் டிக்கெட்களுக்கு 28 சதவீத வரியும் செலுத்த வேண்டியுள்ளது. இதுதவிர உள்ளாட்சி அமைப்புகள் மூலமும் 30 சதவீதம் கேளிக்கை வரியையும் தமிழக அரசு விதித்துள்ளது.
இதனால் தமிழ் சினிமாவிற்கு 48 முதல் 58 சதவீரம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் சினிமா கடுமையாக பாதிக்கப்படும் என கமல்ஹாசன் உள்ளிட்டோர் எதிர்ப்பு குரல் தெரிவித்து வருகின்றனர். இந்நலையில், பிரபல இயக்குனராக ஷங்கர், தமிழ் சினிமாவிற்கு விதிக்கப்பட்ட வரி விதிப்பிற்கு எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறும்போது, 48 முதல் 58 சதவீதம் வரை விதிக்கப்பட்டுள்ளது மிக மிக அதிகம். தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள் என்று பதிவு செய்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.ஓ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.