காளான் சாப்பிடுங்கள்: வியக்கும் அற்புதத்தை பெறலாம்

காளானில் இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், விட்டமின் K, C, D, B, மினரல் சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடென்டுகள், பொட்டாசியம், சோடியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளான் வகைகள் உள்ளது. ஆனால், அவை அனைத்துமே உண்ணக்கூடியது அல்ல. ஏனெனில் அதில பலவகை காளான்கள் விஷத்தன்மையும் கொண்டவை.

காளான் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்?
  • காளானில் குறைந்த அளவு சோடியம் மற்றும் அதிகளவு பொட்டாசியம் சத்துக்கள் உள்ளதால் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்தி, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • காளானில் உள்ள Beta – Glucan எனும் பாலிசாக்கரைடு, பல வகை நோய்களைத் தடுத்து ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
  • காளானில் உள்ள Lentysine, Eeritadenin எனும் வேதிப்பொருட்கள், ரத்தத்தில் கலந்துள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, ரத்தத்தை சுத்தமாக்கி, இதயத்தின் செயல்பாட்டை சீராக்குகிறது.
  • காளானில் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் அதிகம் உள்ளதால், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
  • காளான் சாப்பிடுவதால், ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறு குறைபாடுகளை தடுப்பதுடன், உடலில் ஏற்படும் காயங்களை எளிதில் குணமாக்க உதவுகிறது.
  • நார்ச்சத்து காளானில் அதிகமாக உள்ளது. எனவே காளானை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், அது சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
  • காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணி ஆகியவை சேர்த்து சூப் வைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், வயிற்றுப்புண், ஆசனவாய்ப்புண் போன்ற பிரச்சனைகளை குணமாக்கும்.
யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?
  • கீல்வாதம் பிரச்சனை உள்ளவர்கள் காளானை உணவில் சேர்த்து சாப்பிடக் கூடாது.
  • காளான் உணவுகளை நன்றாக வேகவைத்து சாப்பிட வேண்டும். பச்சையாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • காளான் தாய்ப்பாலை வற்ற வைக்கும் தன்மை கொண்டதால், பாலூட்டும் தாய்மார்கள் காளான் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.