இராணுவத்தினரை சிறையில் அடைப்பதற்கு எமக்கு அவசியமில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பல்வேறு அரசியல்வாதிகளும் தமது அரசியல் இலாபத்துக்காக அரசாங்கத்தை விமர்சிப்பதுடன், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், எமது இராணுவத்தினரை சிறையில் அடைக்க எங்களுக்கு எந்த அவசியமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதத்துடன் தொடர்பு படாதவர்கள் காணாமல் போயிருப்பார்களாயின், அதற்கு எதாவது ஒரு வகையில் இராணுவத்தினர் தொடர்பு பட்டிருந்தால் அது தொடர்பில் சட்ட முறைமைக்கு அமைய எமக்கு செயற்பட நேரிடும் எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.