அரசியலுக்கு வந்தால் ரஜினிக்குத்தான் ஆபத்து… சு.சுவாமி எச்சரிக்கை!

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் ‘நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவருக்குத்தான் ஆபத்து’ என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில், ” தமிழக அரசியல் தலைவர்கள் இங்கே தான் புலி டெல்லி சென்றால் பூனைக்குட்டிதான். தமிழகத்தில் தற்போதுள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக முதல்வரை சந்திப்பேன் என்று தெரிவித்தார்.

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள குட்கா விற்க லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘குட்கா விவகாரத்தில் வழக்கு இருப்பதால் பிறகு பார்க்கலாம் ‘ என்று பதில் அளித்தார்.

அதே போல அதிமுக அணிகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதிலில், அதிமுகவில் சசிகலா அணி மட்டும்தான் உள்ளது வேறு அணிகள் எல்லாம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் இங்கே புலியாக இருந்தாலும் டெல்லிக்கு சென்றால் அவர்கள் எல்லாம் பூனைக்குட்டி தான் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.