தொலைக்காட்சி சீரியலை பார்த்து…சகோதரியை கொன்ற சிறுவன் பரபரப்பு வாக்குமூலம்!!!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லாகூரில் 11 வயது சிறுவன் அப்துல் ரஹ்மான் தனது சகோதரி இமான் தன்வீரை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளான்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லாகூரைச் சேர்ந்த 11 வயது சிறுவன் அப்துல் ரஹ்மான் தனது சகோதரி இமான் தன்வீர் இருவரும் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவாதற்காக லாகூர் ஷாலிமார் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளனர். பாட்டி வெளியே சென்ற நேரத்தில், யார் கையெழுத்து அழகாக இருக்கிறது என்பதில் இருவருக்குமிடையே போட்டி எழுந்துள்ளது. இதில் இமான் தனது சகோதரனின் கையெழுத்தை அழகாக இல்லை என்று கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த சிறுவன், தனது சகோதரியின் கழுத்தை துணியால் இறுக்கி கொன்றுள்ளான். பின்னர் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக தன் கையை வெட்டியுள்ளான். வெளியே சென்ற பாட்டி திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் அறை உள் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. திறந்து பார்த்தால் சிறுமி இறந்து கிடந்தாள். மறுபக்கம் சிறுவன் கையில் காயத்துடன் கிடந்தான் என காவல் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முதலில் இவ்வழக்கில் யார் குற்றவாளி என்பது தெரியாமல் இருநத்து. அக்குழந்தையின் வளர்ப்பு தாய் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அதன்பின்னர் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் சிறுவன் கொலை செய்தது தெரியவந்தது.

சிறுவன் அப்துல் ரஹ்மான், இந்திய தொலைக்காட்சியில் வரும் சிஐடி எனும் சீரியலில் வரும் கொலை செய்யும் முறையை பார்த்து தனது சகோதரியை கொன்றதாக ஒப்புக்கொண்டான். இந்த சீரியல், கொலை குற்றங்களை வித்தியாசமான முறையில் துப்பறிவது பற்றிய கதையாகும்.siru