ஏவுகணை மூலம் அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் வடகொரியா: போர்க்கலை நிபுணர்கள் கணிப்பு

உலக நாடுகளின் கண்டனங்களை புறம் தள்ளி அடிக்கடி ஏவுகணை மற்றும் ராக்கெட் எஞ்சின்களை பரிசோதனை செய்யும் வடகொரியா, வடக்கு பியாங்கன் மாகாணத்தில் உள்ள பாங்யான் என்ற இடத்திலிருந்து இன்று காலை, சுமார் 930 கி.மீ பாய்ந்து சென்று இலக்கை குறிவைத்து தாக்கக்கூடிய ஹ்வாசாங்-14 என்ற ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்திருந்தது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிபர் கிம் ஜான் உன் இந்த பரிசோதனையை நேரில் பார்வையிட்டதாகவும், வட கொரியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், வடகொரிய பரிசோதித்துள்ள இந்த ஏவுகணை சுமார் 2500 கிலோ மீட்டர் வரை பாய்ந்து சென்று இலக்கை தாக்கும் வலிமை கொண்டது என ஜப்பானைச் சேர்ந்த போர்க்கலை நிபுணர்கள் கணித்துள்ளனர். எனினும், சோதனை கட்டமாக இன்று ஏவப்பட்ட இன்று ஏவப்பட்ட இந்த ஏவுகணை 40 நிமிடங்களில் 900 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று ஜப்பான் கடலில் விழுமாறு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்த வீரியத்தை வைத்து கணக்கிட்டால், சுமார் இரண்டு மணிநேரத்திற்குள், அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள அலாஸ்கா வரை பறந்து சென்று தாக்கக்கூடிய ஆற்றல் வாய்ந்த ஏவுகணையாக ஹ்வாசாங்-14 கருதப்படுகிறது.