மக்களின் அன்றாட வாழ்க்கையில் ‘ரோபோ’க்களின் பங்கு அதிகரிக்க தொடங்கி விட்டது. மேலை நாடுகளில் உள்ள ஓட்டல்கள், ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட பல நிறுவனங்களில் ‘ரோபோ’க்கள் பணிபுரிகின்றன.
தேளின் விஷத்தில் மருத்துவ குணம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது உயிர்காக்கும் மருந்துகளில் கலக்கப்படுகிறது. எனவே தேள்களிடம் இருந்து விஷத்தை பிரித்து எடுக்கும் ‘ரோபோ’க்களை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.
இது மிகவும் எடை குறைவானது. சிறிய அளவிலும் உள்ளது. இந்த ‘ரோபோ’ தேளில் இருந்து விரைவாகவும், பாதுகாப்பாகவும் விஷத்தை பிரித்து எடுக்கின்றன.
தேளிடம் இருந்து விஷத்தை பிரித்து எடுப்பது மிகவும் கஷ்டமானது. இறந்த தேள்களின் கொடுக்குகளில் இருந்து மின்சார அதிர்ச்சி மூலம் விஷம் பிரித்தெடுக்கப்படுகிறது.
தேளில் இருந்து விஷத்தை பிரித்து எடுக்கும் ‘ரோபோ’வை விஞ்ஞானி மொயுத் மிகாமல் கண்டு பிடித்துள்ளார். அதற்கு ‘வெஸ்ட்-4’ என பெயரிட்டுள்ளார். இந்த ரோபோ மிக சிறியதாக இருப்பதால் ஆய்வகம் அல்லது வெளியிடங்களில் வைத்து பணியாற்ற முடியும்