சீனா: உலகின் மிக நீளமான கண்ணாடி பாலத்தில் விரிசல்

சீனாவின் மகிழ்ச்சி மற்றும் திகிலூட்டும்  அனுபவத்தை வழங்கும் உலகின் மிகப்பெரிய மற்றும் உயரமான கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதன் உயரம் 400 அடிக்கும் அதிகமாக இருக்கும். இத்தகைய உயரத்தில் இருந்து கீழே பார்க்கும் போது நகரின் காட்சி பார்வையாளர்களுக்கு திகில் கலந்த சந்தோஷத்தை ஏற்படுத்தும். இதனால் இந்த பாலத்தின் சுவாரஸ்யத்தை அனுபவிக்க அதிக அளவில் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த பாலம் தென்மேற்கு சாங்குயிங் பகுதியில் இருந்து 70 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. உலகின் மிக்கபெரிய கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் தற்சமயம் ஒரு சமயத்தில் 30 பேர் மட்டுமே  நடக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

இதே போன்று சீனாவின்  சினிக் பூங்காவில் உள்ள கண்ணாடி பாலம் மிகவும் புகழ் பெற்றதாகும். கடந்த வருடம் மத்திய ஹுனான் மாகாணத்தில் 430 மீட்டர் நீளமும் ,300 மீட்டர் உயரமும் கொண்ட கண்ணாடி பாலம் திறக்கப்பட்டது. எனினும் மக்கள் கூட்டம் அதிகமாக வருவதால் தற்காலிகமாக மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.