இந்தியாவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடம்கிடையாது சீனா சொல்கிறது

china
இந்தியாவின் சிக்கிம் மாநிலம், பூடான் நாட்டின் டோகாலம், சீனாவின் டோங்லாங் ஆகிய பகுதிகள் ஒரு முனையில் சந்திக்கின்றன. அங்கு சீனாவுக்கும், பூடானுக்கும் இடையே எல்லைத்தகராறு நிலவி வருகிறது. பூடானுக்கு சீனாவுடன் தூதரக உறவு இல்லாததால், இந்தியாவின் ராணுவ பலத்தையே நம்பி இருக்கிறது.
பூடானை ஆக்கிரமிக்கும் வகையில், சீன ராணுவத்தினர் அப்பகுதியில் சாலை அமைத்து வருகிறார்கள். ஒரு மாதத்துக்கு முன்பு, அவர்கள் சிக்கிம் மாநிலத்துக்குள் புகுந்து, இந்திய ராணுவத்தின் 2 பதுங்கு குழிகளை அழித்தனர். மேலும், இந்தியப் படைகளை திரும்பிச் செல்லுமாறு மிரட்டல் விடுத்து வருகிறார்கள். அவர்களை சமாளிக்க கூடுதலாக இந்திய படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. இதனால், ஒரு மாத காலமாக அங்கு போர் அபாயம் நிலவி வருகிறது. இந்தியா தன்னுடைய படைகளை திரும்ப பெற மாட்டோம் என கூறிவிட்டது.
இந்தியாவுக்கான சீன தூதர் லுவோ ஜாவோகி பேசுகையில் பிரச்சனையை சரியாக கையாளவில்லை என்றால் போர் ஏற்படும் என சீன மீடியா செய்திவெளியிட்டது தொடர்பாக கேள்வி எழுப்பட்டது, அதற்கு அவர் பதிலளிக்கையில், போர், பேச்சுவார்த்தை என்ற நிலைபாடு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது, இது உங்களுடைய அரசின் கொள்கையை பொறுத்து உள்ளது (சிக்கிம் செக்டாரில் இருந்து இந்திய ராணுவத்தை திரும்ப பெறுவது) என கூறிஉள்ளார். மேலும் முச்சந்திப்பில் கல்லறை போன்ற நிலையானது நிலவுகிறது,
பிரச்சனையை தீர்க்கும் பொறுப்பு இந்தியாவிடம் உள்ளது என கூறிஉள்ளார் லூவோ ஜாவோகி.
இந்திய ராணுவம் எந்தஒரு நிபந்தனையுமின்றி வெளியேற வேண்டும், இந்தியா – சீனா இடையில் ஒரு அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை வேண்டும் என்றால் இதுதான் முன்நிபந்தனையாகும் என கூறிஉள்ளார்.