பல்வேறு நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து எதிரிகளின் இலக்கை குறிவைத்து அழிக்கும் ஏவுகணை மற்றும் ராக்கெட் எஞ்சின்களை சோதனை செய்யும் வடகொரியா, நேற்று புதிய ஏவுகடிண ஒன்றை சோதனை செய்தது.
வடக்கு பியாங்கன் மாகாணத்தில் உள்ள பாங்யான் என்ற இடத்திலிருந்து சுமார் 930 கி.மீ பாய்ந்து சென்று இலக்கை குறிவைத்து தாக்கக்கூடிய ஏவுகணையை நேற்று காலை வடகொரிய பரிசோதித்தது. கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் உடன் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், வடகொரியா விவகாரம் தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், வடகொரியா இந்த ஏவுகணை சோதனையை நடத்தியிருப்பது அமெரிக்கா – தென்கொரியா இடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியாவின் இத்தகைய செயலுக்கு அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், ஐ.நா. பொதுக்குழுவை அவசரமாக கூட்டவும் அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கக்கூடிய இந்த ஏவுகணை பெரிய, கனமான அணு போராயுதம் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அந்த ஏவுகணை அமெரிக்காவுக்கு, வடகொரியா அளிக்கும் பரிசு என்று அந்நாட்டு சுதந்திர தினத்தன்று அதிபர் கிம் ஜாங்-உன் தெரிவித்துள்ளார்.
நேற்று அனுப்பப்பட்ட இந்த ஏவுகணைப் பரிசு, நிச்சயமாக அமெரிக்கர்களுக்கு சந்தோசத்தை கொடுத்திருக்காது. மேலும் அமெரிக்கர்களின் அலுப்புக்கு மேலும் பரிசுகள் அனுப்பப்படும் என்றும் கிம் தெரிவித்தார்.