சென்னை: கேளிக்கை வரியை ரத்து செய்யுமாறு தமிழக அரசுக்கு ரஜினிகாந்த் டிவிட்டரில் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அந்த டிவிட்டில் மாநில அரசு என்பதை கொட்டை எழுத்தில் எழுதி, சமிக்ஞை கொடுத்துள்ளார் அவர். சினிமா திரையரங்குகளை மத்திய அரசு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கூடுதலாக 30 சதவீதம் கேளிக்கை வரியும் விதிக்கப்படுகிறது. கேளிக்கை வரி மீதான வரியையும் சேர்த்தால் மொத்த வரி 60 சதவீதத்தை தாண்டுகிறது. இதனால் தமிழகம் முழுக்க திங்கள்கிழமை முதல் தியேட்டர்கள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.