இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது மாநில சங்கங்களில் உள்ள நிர்வாகிகளில் ஒருவர் மானேஜராக நியமிக்கப்படுவார். அவர் அந்த தொடர் குறித்து பிசிசிஐ-க்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அப்படித்தான் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கு கபில் மல்ஹோத்ரா என்பவர் மானேஜராக நியமிக்கப்பட்டிருந்தார். இவர் விராட் கோலிக்கும், அனில் கும்ப்ளேவிற்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை என்று தனது அறிக்கையில் கூறியிருந்தார்.
இது உச்சநீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட நிர்வாகக் குழுவிற்கு திருப்தி அளிக்கவில்லை. என்னுடைய கோச்சிங் ஸ்டைலை விராட் கோலி விரும்பவில்லை என கும்ப்ளே தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மல்ஹோத்ரா, இருவருக்கும் இடையில் பிரச்சினை ஏதும் இல்லை என்ற கூறியிருப்பதால், அணியின் சுற்றுப் பயணத்திற்காக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மானேஜர்களை நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பதவி குறித்து விரைவில் விளம்பரம் வெளிவர இருக்கிறது என்று பிசிசிஐ சீனியர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.