அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 10-ம் தேதி பிரமாண்டமாக வெளிவரவிருக்கும் படம் விவேகம். இப்படத்தின் டீசர், சிங்கிள் ட்ராக் என அனைத்தும் செம்ம ஹிட் அடித்துள்ளது.
தற்போது இப்படத்தை வாங்க பல தொலைக்காட்சிகள் போட்டி போட்டு வருகின்றது. இதில் விஜய் டிவி தான் முன்னிலையில் உள்ளதாம்.
எப்படியும் இந்த முறை அஜித் படத்தை வாங்கியே ஆகவேண்டும் என்ற குறிக்கோளில் உள்ளதாம், ஏனெனில் இதுவரை எந்த ஒரு அஜித் படமும் விஜய் டிவியின் கைவசம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை ஒரு அஜித் படத்தை கூட எடுக்காத இந்த சேனல் இந்த முறை போட்டி போடுவது ரசிகர்களுக்கே ஷாக் தான்.