சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2வது மகள் சௌந்தர்யா. தற்போது தனுஷ் நடித்து வரும் வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கி வருகிறார். இவர் கடந்த 2010ல் தொழிலதிபர் அஸ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
மிகவும் பிரம்மாண்டமாக இத்திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2015 ல் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. கடந்த வருடம் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து பிரிந்து வாழ்ந்தார்கள்.
தற்போது இருவருக்கும் முறையான விவாகரத்து உத்தரவு நீதிமன்றம் மூலம் கிடைத்துள்ளது.