ஓவரா திங் பண்ணாதிங்க பாஸ்.. மிகையாக சிந்திக்கும் இவர்கள் சுலபமாக கோபமும், எரிச்சலும் அடைவார்கள். அதனால் தலைவலி, பல் வலி, பற்களைக் கடித்தல் போன்ற பிரச்சனைகள் எல்லாமே மேஷ ராசிக்காரர்களுக்கு சாதாரணமாக ஏற்படக்கூடியதே. பல்லைக் பராமரிங்க ஜி.
ரிஷபம்
இவர்களுக்கு அடிக்கடி சளியும், காய்ச்சலும் பிடித்துக் கொள்ளும். சுக்கிரன் வலுவடைந்து இருந்தால், தீவிர தொண்டை தொற்றுக்கள், தைராய்டு, டான்சிலிடிஸ், தீவிர கழுத்து மற்றும் காது தொற்றுக்கள் போன்ற பிரச்சனைகளால் அவர்கள் அவதிப்படுவார்கள. மேலும் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
மிதுனம்
உங்களை ஆள்வது புதன் கிரகமாகும். இது உடலில் உள்ள மூட்டுக்கள் மற்றும் சுவாச அமைப்பை ஆளுகிறது. அதனால் சளித் தொல்லைக்கு ஆளாவார்கள் மிதுன ராசிக்காரர்கள். மிதுனம் வலுவிழந்து கிடந்தால் தீவிர காய்ச்சல், இருமல் மற்றும் தசைநாண் அழற்சியால் அவர்கள் சுகவீனம் வந்து தொலைக்கும்..உஷார்.
கடகம்
ஹலோ கடக ராசி, வயிறு மற்றும் செரிமான அமைப்புடன் நேரடியாக தொடர்பில் உள்ளது. அதிக உள்ளுணர்வு மற்றும் உணர்ச்சிப் பொங்கும் வகையில் உள்ள கடக ராசிக்காரர்கள், செரிமான அமைப்பு மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள். அல்சர் வரும் நேரத்துக்கு சாப்பிடனும் பட்டினி கிடக்கக் கூடாது.
சிம்மம்
நீங்க சூரியனால் ஆளப்படுகிறீர்கள் சிம்மம், இதயத்தையும் உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தையும் ஆளும். அதனால் அவர்கள் அதிகார தன்மையுடன், வாழ்க்கையில் அதிக தன்னம்பிக்கையுடன் விளங்குவார்கள். இருப்பினும், வலுவிழந்த சிம்மம் என்றால் இதயம், ஊக்கமின்மை மற்றும் முதுகு பிரச்சனைகளால் நொந்து நூலாவீர்கள்.
கன்னி
நீங்க செம சாப்பாட்டு பிரியர். அதனால இயற்கையாகவே, அது வயிற்றையும், குடல்களையும் ஆளும். எதெற்கெடுத்தாலும் ஓடத்துடிக்கும் அவர்கள் பொதுவாக எல்லாவற்றிலும் அவசரமாக இருப்பார்கள்.
அவர்கள் மனது அளவுக்கு அதிகமாக பகுப்பாய்வு செய்வதால், தொடர்ச்சியான ஓய்வின்மையே இருக்கும். அதனால் உணவு அலர்ஜி, அல்சர், மலச்சிக்கல் மற்றும் இதர வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் வந்தடையும்.கொஞ்சம் நாக்கை கட்டுப் படுத்துங்க சார்..
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் நல்லா என்ஜாய் பண்ண விரும்புவார்கள். தங்களைச் சுற்றி சந்தோஷம் நிறைந்த குதூகல சூழ்நிலை நிலவ வேண்டும் என அவர்கள் விரும்புவார்கள்.
துலாம் ராசி, சிறுநீர்ப்பை செயல்பாடுகள் மற்றும் சிறுநீரகங்களை ஆளும். அவர்கள் துயரத்தில் ஆழ்த்தப்படுவார்கள். அதனுடன் சேர்த்து சிறுநீரக செயலிழப்பு மற்றும் தீவிர சிறுநீர்ப்பை அழற்சிக்கு ஆளாவார்கள். கொஞ்சம் அடக்கி வாசிங்க பாஸ்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் பொறாமை குணம் கொண்டவர்கள். தங்களுக்கு சொந்தமானது என நினைப்பவற்றின் மீது அவர்கள் ஆட்டிப்படைக்கும் மற்றும் சொந்தம் கொண்டாடும் குணத்தை கொண்டிருப்பார்கள்.
எப்போதும் எதிர்மறையாகவும் மற்றும் எதிர்மறை சிந்தனையுடனும் இருப்பார்கள். இவர்களை ஆளும் ப்ளூட்டோ கிரகம், ஹார்மோன்கள் மற்றும் இனப்பெருக்க அமைப்பிற்கு பல பிரச்சனைகளை உண்டாக்கும். கொஞ்சம் வாயை மூடிக் கொள்ள வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்கார்கள் தங்களின் உயிர், கண் பார்வை, தொடை மற்றும் கல்லீரலின் மீது அதீத அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமான நம்பிக்கை அவர்களின் பார்வையை பாதிக்கும், முதுகெலும்பில் காயத்தை ஏற்படுத்தும், நச்சுத்தன்மை பிரச்சனைகளை உண்டாக்கும்.
மகரம்
கடின உழைப்பாளியான மகர ராசி, எலும்புகள், குறிப்பாக உடலில் உள்ள மூட்டுக்களை ஆளும். பிடிவாதம் நிறைந்தவர்களான இவர்கள், கடினமாக உழைத்து தங்கள் லட்சியங்களை அடைபவர்கள். அதனால் அவர்களின் எலும்புகளும், மூட்டுக்களும் வலுவிழக்கும். கொஞ்சம் வாக்கிங் போங்க பாஸ்.
கும்பம்:
சந்தோஷமாக இருக்கும் கும்ப ராசி, மூட்டுக்களின் அசைவையும் உடலையும் ஆளும். நரம்புகளின் ஓட்டத்திற்கும், உந்துவிசைக்கும் அவர்கள் பொறுப்பாகும்.
இதய நோய்கள், கீல்வாதம், மூட்டுகளில் வீக்கம், ஆஸ்துமா, சுருள் சிரை நாளங்கள் மற்றும் அலர்ஜிகள் போன்றவைகளால் அவதிப்படுவார்கள். சாப்பாடு கன்றோல் பண்ணுங்க ஜி
மீனம்:
அனிச்சைகளையும் நரம்பியல் அமைப்பையும் ஆளும். நடைமுறைக்கு ஏற்ற வகையில் இல்லாமல் போவதால், வாழ்க்கையில் ஏற்படும் ஏமாற்றங்களினால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும்.
இது அதிகமாகும் போது, அவர்களின் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுவிழக்க செய்து, அவர்களுக்கு பல வியாதிகளை உண்டாக்கிவிடும்..கொஞ்சம் ஆட்டத்தை குறைங்க பாஸ்.