ஆர்வ கோளாறில் ஓவராக ஆடி காலில் வடிவேலுக்கு காயம்

vadivelu

 

 

 

 

 

 

 

வைகைப்புயல் வடிவேலு கடந்த சில வருடங்களாக ஹீரோவாக தான் நடிப்பேன் என்று சில படங்களில் நடித்தார். அப்படம் அனைத்தும் பப்படம் ஆனது தான் மிச்சம், மீண்டும் காமெடி ட்ராக்கே போவோம் டா என்று கத்திச்சண்டை, சிவலிங்க போன்ற படங்களிலும் நடித்தார்.

ஆனால் சரக்கு தீர்ந்து போனதால் அவர் படத்தில் செய்த நகைச்சுவையெல்லாம் நசுங்கி போனது தான் வருத்தம். ஆனால் விட முயற்சியை விடமாட்டேன் என்று விஜயுடன் இம்முறை மெர்சல் படத்தில் நடித்து வருகிறார் வடிவேல்.

இப்படத்தில் ஒரு பாடலில் விஜயுடன் சேர்த்து ஆடுவது போல் காட்சி. ஆர்வ கோளாறில் ஓவராக ஆடி காலில் வடிவேலுக்கு காயம் ஏற்பட்டுவிட்டதாம். இதனால் மருத்துவர்கள் சிறிது காலம் ஓய்வு எடுக்க சொல்லியுள்ளார்களாம்.இந்த பாட்டை சீக்கிரம் முடிக்க வேண்டும் , இந்நேரத்தில் இப்படி ஆயிடுச்சே என்று கவலையில் உள்ளாராம் அட்லீ.