சிரேஷ்ட பெண் வணிக ஊடகவியலாளரும், சண்டே டைம்ஸ், ஏ.எப்.பி. போன்ற ஊடகங்களின் முன்னாள் ஊடகவியலாளருமான மெல் குணசேகர கொலை வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் மெல் குணசேகரவை கொலை செய்துவிட்டு அவரது கையடக்கத் தொலைபேசியை கொள்ளையிட்டமை ஆகிய குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏ.ஜோர்ஜ் அல்லது ‘ பெயின்ட் பாஸ்’ என அறியப்படும் பிரதிவாதிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணைகள் நிறைவுற்றுள்ள நிலையிலேயே, இன்று அந்த வழக்கின் தீர்ப்பானது மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி முதல் இடம்பெற்ற நீண்ட விசாரணைகள் நிறைவுற்றுள்ள நிலையிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.