கோடை காலங்களில் ஏற்படும் வெப்பத்தால் மனிதர்களுக்கு அம்மை போன்ற வெப்பக்கால நோய்கள் ஏற்படுகின்றன. இந்த வெப்ப நோய்கள் வராமல் தடுக்க கோடை காலத்தில் மழை பெய்து குளிர்ச்சி அடைய வேண்டும் என்று நினைத்து மழை தர வேண்டினர் நம் முன்னோர்கள்.
மழை பொழிய வேண்டி இந்த காக்கும் அன்னையாம் தெய்வம் மாரியம்மனை வழிபட்டு வருகிறோம். இந்த மாரியம்மன் பல நோய்களைப் போக்கும் கசப்பு சுவையுடைய வேப்ப மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட சக்தியின் மற்றொரு நிலை என்றும் சொல்கிறார்கள்.
இதனால் இந்த மாரியம்மனுக்குத் தல விருட்சமாக வேம்பு மரமே இருக்கிறது. இந்த மாரியம்மன் இடத்திற்குத் தகுந்தபடி பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
மேலும் “சிவபெருமான், மன்மதனை எரித்த வெப்பத்தின் அனல் தாங்காமல் தேவர்களும், மனித உயிர்களும் தவித்தனர். எனவே, அவர்கள் அன்னை கருணை பெருங்கடல் பார்வதியை வேண்டினர்.
அவள் அந்த வெப்பத்தை உள்வாங்கிக் கொண்டு உலகெல்லாம் மழையாக பொழிந்து காத்தருளினால். அந்த சக்தி சொரூபமே சீதளாதேவி என்றும், மாரியம்மன் என்றும் வழங்கப்படுகிறது என்கிறார்கள்.