தமிழகத்தில் நாங்கள் போராடி கொண்டிருக்கிறோம், ஆனால் ரஜினி அமெரிக்காவில் கேசினோ விளையாடி கொண்டிருக்கிறார் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ் தேசிய இன மக்கள் சந்திக்கும் சிக்கல்களும், தீர்வுகளும் என்ற தலைப்பில் சேலம் அஸ்தம்பட்டியில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது,
ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் திரையரங்குகளில் விலை கட்டணம் உயர்த்தினால் திருட்டு விசிடி பயன்பாடு அதிகமாகி திரையுலகிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சி தமிழர்களுக்கு உரியது அல்ல. சரக்கு மற்றும் சேவை வரியால் சிறுகுறுத் தொழிலையும், தொழிலாளர்களை அழிக்கும் வகையில் இயற்றப்பட்டு உள்ளது. அத்தியவாசிய பொருட்களுக்கு வரி குறைக்கப்படும் என்று கூறும் போது எரிவாயு மானியத்திற்கு 32 ரூபாய் அதிகபடுத்தியது எதற்காக?
உழைக்கும் மக்களிடம் வரியை சுரண்டி பொருளதார வளர்ச்சியை பெருக்குவது என்பது எவ்வாறு வளர்ச்சி என கூற முடியும். பின்னர் கல்வி மற்றும் மருத்துவம் ஒவ்வொரு மனிதனின் உரிமை அதை ஒரே மாதிரியாக கொடுக்க முடியுமா? இந்தியாவை விட ஜிஎஸ்டி வரி குறைவாக உள்ள நாடுகள் இந்தியா மாணவர்கள் படிப்பிற்கு வரி விலக்கு வழங்குவது இந்தியாவிற்கு அவமானம்.
தமிழகத்தில் பல்வேறு மக்கள் பிரச்சினைக்காக நாங்கள் போராடி வருகிறோம். ஆனால் ரஜினிகாந்த் அமெரிக்காவில் கேசினாவில் விளையாடி கொண்டிருக்கிறார் என்று காட்டமாக பேசினார் சீமான்.