போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவளிப்பேன்! – புதிய ராணுவ தளபதி

ranuva

 

 

 

 

 

 

 

 

படையினருக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கின்ற போதிலும் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பூரண ஆதரவளிக்கப்படும் என புதிய ராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

ராணுவத் தளபதியாக நேற்று (புதன்கிழமை) தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு நபருக்கும் குற்றமிழைக்க முடியாது. குறிப்பாக ராணுவ சீருடையில் உள்ளவர் குற்றமிழைக்கவே முடியாதென குறிப்பிட்டுள்ள ராணுவத் தளபதி, ராணுவ சட்டத்தை போலவே குற்றவியல் நடைமுறை சட்டக் கோவைக்கும் ராணுவத்தினர் உட்பட்டவர்கள் என்று குறிப்பிட்டார்.

அந்தவகையில் தவறிழைத்தவர்கள் தண்டனை பெறுவதிலிருந்து தப்பிக்க முடியாதென்பதோடு, அதிகாரத்தில் இருந்தவர்கள் ராணுவத்தினருக்கு தவறான கட்டளைகளை வழங்கியிருந்தால் அதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.