ஏ.ஆர்.ரகுமானுக்கு 3 சகோதரிகள், மூத்தவர் ரைஹைனா. இவர் மகன்தான் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இன்னொருவர் பாத்திமா. கடைக்குட்டி இஷ்ரத் காதரி. இவரும் சமீபத்தில் ஹாலிவுட் படம் ஒன்றுக்கு இசைமைத்து, பாடியிருக்கிறார். இலங்கை தமிழரான ராஜுதிருச்செல்வன் அந்த படத்தை இயக்கி இருக்கிறார்.
அந்த வாய்ப்பு குறித்து கூறிய இஷ்ரத்… ”அண்ணன் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சிகளில் நான் பாடுவேன். ‘ஐ’ படத்தின் தெலுங்கு வெர்ஷனில் என்னோடு நீ இருந்தால் பாடலை பாடி இருக்கிறேன்.
ஐ.நா.சபையில் அண்ணன் நடத்திய நிகழ்ச்சிக்காக ரிகர்சல் செய்து கொண்டிருந்த போது ராஜ் திருச்செல்வன் என்னை பார்த்து இந்த வாய்ப்பை கொடுத்தார். அது ஹாலிவுட் படமாக இருந்தாலும் கனவுகள் பலித்தது என்ற தமிழ் பாடல் அதில் இடம் பெறுகிறது.
நானும் கவிஞர் குட்டி ரேவதியும் சேர்ந்து ஏழுதியிருக்கிறோம். நான் பாடி, இசையமைத்து இருக்கிறேன். சென்னையிலே ஒலிப்பதிவு செய்து இருக்கிறேன். பாடலை கேட்ட அண்ணன் பாராட்டினார்.
லேட்டஸ்ட்டாக, ஸ்ரீதேவி நடிப்பில் உருவாகும் ‘மாம்’ படத்தின் தமிழ் பதிப்பில் ‘ராட்சத தீ ஒன்று’ என்ற பாடலை பாடியிருக்கிறேன். இந்த படத்துக்கு அண்ணன் தான் இசை. அவர் மாதிரி யாரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் வேலை செய்ய முடியாது” என்றார்.