மூன்று மாதங்களுக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தையும், பொலிஸ் திணைக்களத்தையும் எனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் தாருங்கள். ஜனாதிபதி கோரிக்கை !

“ஊழல் பெருச்சாளிகளைப் பிடிக்க சட்டமா அதிபர் திணைக்களத்தையும், பொலிஸ் திணைக்களத்தையும் 3 மாதங்கள் எனது நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் தாருங்கள்.”
– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக் கூட்டத்தில் கோபமாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்றுமுன்தினம்  நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கடந்த காலங்களில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் மீதான விசாரணைகள் இன்னமும் முடிவுறாமை தொடர்பாகவும், அவர்களுக்கு எதிராக ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றும் நடவடிக்கை எடுக்கப்படாமை தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளது. இதற்காக நிறுவப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் செயலகம் என்பன போதிய செயற்றிறனுடன் இயங்கவில்லை என்பது தொடர்பிலும் அமைச்சர்களால் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருத்துகளால் சூடாகிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மூன்று மாதங்களுக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தையும், பொலிஸ் திணைக்களத்தையும் எனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் தாருங்கள். ஊழல் பெருச்சாளிகளை நான் பிடித்துக் காட்டுகின்றேன் என்று கூறியுள்ளார். இதன் பின்னர் அமைச்சரவை அமைதியாகியுள்ளது.