லேடி சூப்பர் ஸ்டாருக்கு அம்மாவாக நடிக்க விருப்பம்’ : டுவீட் செய்த பிரபல நடிகை!

அம்மா, மகளாக நடிக்க நாங்கள் சரியாக இருப்போமா என்ற கேள்வியுடன் நடிகை நயன்தாராவுடன் எடுத்த போட்டோ ஒன்றை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் டுவீட் செய்துள்ளார்.

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படு்ம் சைமா விருதுகள் 2017 கடந்த ஜூன் 30 மற்றும் ஜூலை 1ஆம் தேதி அபிதாபியில் நடைபெற்றது.

இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா மற்றும் நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணனும் கலந்து கொண்டனர்.

விழாவின் போது லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகை நயன்தாராவிடம் தன் மொபைல் போனை காட்டி பேசுவது போன்ற போட்டோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.