ஜீலை மாதத்தில் சூர்யா ரசிகர்களுக்கு டபுள் விருந்து.

விக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்திக், செந்தில், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, சுரேஷ்மேனன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார்.

 

 

 

 

 

 

இப்படத்தின் சூட்டிங் தொடங்கி ஓரிரு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இப்படம் தொடர்பான போஸ்டர், டீசர் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இன்னும் சில தினங்களில் இந்த ஜீலை மாதத்திலேயே இதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிடவிருகிறார்களாம்.

மேலும் சூர்யா பிறந்தநாளில் ஓர் இன்ப அதிர்ச்சி உள்ளது என்கிறது படக்குழு.

அது இப்படத்தின் டீசராக இருக்கலாம் எனவும் தகவல்கள் வந்துள்ளன.