கொழும்பு நகரில் போக்குவரத்து சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் கொழும்பு நகரில் போக்குவரத்து சட்டம் உரிய முறையில் செயற்படவில்லை என சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கொழும்பு நகர வீதிகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக உரிய முறையில் போக்குவரத்து சட்டத்தை கடைப்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
சாரதிகள் உரிய முறையில் செயற்பட்டால் மாத்திரமே சட்டத்தை செயற்படுத்த முடியும் என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு செயற்பட்டால் மாத்திரமே பொது மக்கள் சிரமம் இன்றி வீதியில் பயணிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.