பெண்ணை பெற்ற குழந்தைகள் முன் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பெற்ற குழந்தைகள் முன் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் காஜுவாகா பகுதியைச் சேர்ந்த 35 வயது மிக்க பெண் ஒருவர் கடந்த திங்கள் கிழமை வீட்டில் தனது 3 குழந்தைகளுடன் தனியாக இருந்துள்ளார். அப்பெண்ணின் கணவர் வேலைக்கு சென்றதை அறிந்து கொண்ட சில மர்மநபர்கள் வீட்டினுள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.

இதனையடுத்து, குழந்தைகள் முன்னிலையில், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், இதை பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டிவிட்டு, வீட்டிலிருந்து 500 ரூபாயை மர்மநபர்கள் பறித்து சென்றுள்ளனர். இதன் பின்னர், பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை போலீசாரிடம் புகாராக தெரிவித்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட காஜுவாகா போலீஸார், பலாத்காரத்தில் ஈடுபட்ட இருவர் மற்றும் இந்த குற்றத்திற்கு உதவிய இருவர் என 4 பேரை நேற்று கைது செய்துள்ளனர். நான்கு பேரையும் போலீஸ் காவலில் எடுத்து தொடர்ந்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.