சென்னை : உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விசாரணை, சென்னை ஐகோர்டில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் இன்று ஆஜராகி, உள்ளாட்சி தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற நீதிபதிகளின் கேள்விக்கு மாநில தேர்தல் கமிஷன் சார்பில் பதிலளிக்கப்பட்டது.
அப்போது , ஜூலை மாத இறுதிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் பற்றி முடிவு செய்யப்படும். உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. பணிகள் நிறைவடையாத நிலையில் தேர்தல் குறித்து முடிவு செய்ய முடியாது.
அதனால் ஜூலை மாதத்திற்கு பிறகே, தேர்தல் தேதி பற்றி முடிவு செய்யப்படும். 2017 ஜனவரி மாத வாக்காளர் பட்டியலின்படி வார்டுகள் பிரிக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான 1700 புகார்கள் குறித்து விசாரிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கேட்ட நீதிபதிகள், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான 3 வழக்குகளின் விசாரணையையும் ஜூலை 14 ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளனர்.சென்னை : உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விசாரணை, சென்னை ஐகோர்டில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் இன்று ஆஜராகி, உள்ளாட்சி தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற நீதிபதிகளின் கேள்விக்கு மாநில தேர்தல் கமிஷன் சார்பில் பதிலளிக்கப்பட்டது. அப்போது , ஜூலை மாத இறுதிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் பற்றி முடிவு செய்யப்படும். உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. பணிகள் நிறைவடையாத நிலையில் தேர்தல் குறித்து முடிவு செய்ய முடியாது. அதனால் ஜூலை மாதத்திற்கு பிறகே, தேர்தல் தேதி பற்றி முடிவு செய்யப்படும். 2017 ஜனவரி மாத வாக்காளர் பட்டியலின்படி வார்டுகள் பிரிக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான 1700 புகார்கள் குறித்து விசாரிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கேட்ட நீதிபதிகள், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான 3 வழக்குகளின் விசாரணையையும் ஜூலை 14 ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளனர்.