சட்ட மா அதிபர் திணைக்களமும் பொலிஸ் திணைக்களமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் கொண்டு வரப்பட வேண்டுமென ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு பொறுப்பான துறைசார் அமைச்சரும், பொலிஸ் திணைக்களத்திற்கு பொறுப்பான துறைசார் அமைச்சரும் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோரை தண்டிக்கும் செயன்முறைக்கு தடை ஏற்படுத்தி வருகின்றனர் என்பது ஜனாதிபதியின் உரையின் மூலம் புலனாகியுள்ளது.
ஜனாதிபதியின் மீது மெய்யாகவே இந்த அமைச்சர்களுக்கு மரியாதை இருந்தால் குறித்த திணைக்களங்களை ஜனாதிபதியிடம் அமைச்சர்கள் தாமாகவே ஒப்படைக்க வேண்டும்.
இந்த திணைக்களங்கள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டுகின்றார்.
அமைச்சர்கள் ஊழல் பேர்வழிகளை பாதுகாப்பதுடன், ஊழல் மிகுந்த ஆட்சியையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது என அனுர குமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்