அமெரிக்காவில் இலங்கையர்களுக்கு கிடைத்த வாய்ப்பு

இலங்கையர்கள் சிலருக்கு அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் 22 பேருக்கு அந்நாட்டு நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு குடியுரிமை வழங்கப்பட்டவர்களில் இலங்கையர்கள் சிலரும் உள்ளடங்குவதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.