பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டி அவ்வவ்போது அதிரடியான கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் வருகை தரும் சமயத்தில், அமெரிக்கர்களை குரங்கு என்று ரோட்ரிகோ விமர்சனம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இஸ்லாமிய தீவிரவாதிகளை உயிருடன் சாப்பிட்டு விடுவேன் என்று அதிபர் ரோட்ரிகோ ருடெர்டி எச்சரிகை விடுத்துள்ளார். இது தொடர்பாக அதிகாரிகள் மத்தியில் பேசிய போது கடும் கோபத்தில் தீவிரவாதிகளுக்கு மிரட்டல் விடுத்தார்.
முன்னதாக, இஸ்லாமிய தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாலுமிகளில் இருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட நிலையில் ரோட்ரிகோ இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்சில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வியட்நாம் நாட்டை சேர்ந்த 6 மாலுமிகள் ஐ.எஸ். ஆதரவுபெற்ற பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர். அவர்களில் 2 பேரின் உடல்கள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் பாசிலன் தீவுக்கு அருகே கண்டெடுக்கப்பட்டதாக பிலிப்பைன்ஸ் ராணுவத்தினர் தெரிவித்தனர்.