“பிரபுதேவா இல்லாமல் இந்தப் படத்தை நினைத்துகூடப் பார்க்க முடியாது”

prabu

 

 

 

 

 

 

 

பிரபுதேவா இல்லாமல் இந்தப் படத்தை நினைத்துகூடப் பார்க்க முடியாது’ என இயக்குநர் ரெமோ தெரிவித்துள்ளார்.

ரெமோ டி’ ஸோஸா இயக்கத்தில் பிரபுதேவா நடித்த படம் ‘எனிபடி கேன் டான்ஸ்’ (ஏபிசிடி). பிப்ரவரி மாதம் 2013ஆம் ஆண்டு  வெளியான இந்தப் படம், ஏகப்பட்ட வசூலைக் குவித்தது. எனவே, இதன் இரண்டாம் பாகம், 2015ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து வருண் தவான், ஷ்ரத்தா கபூர் ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது, இதன்  மூன்றாம் பாகம் உருவாக இருக்கிறது.
“பிரபுதேவாவைத் தவிர்த்துவிட்டு இந்தப் படத்தை நினைத்துகூடப் பார்க்க முடியாது. மூன்றாம் பாகத்திலும் அவர் இருக்கிறார். மைக்கேல் ஜாக்சனுக்குப் பிறகு நடனத்தின் நுட்பங்களை பிரபுதேவாவிடம் தான் பார்க்கிறேன். முதல் பாகம் எடுத்தபோது  மொழியைப் புரிந்துகொள்ள கொஞ்சம் கஷ்டப்பட்டார். ஆனால், இப்போது அந்தப் பிரச்னை இல்லை” என்கிறார் இயக்குனர்  ரெமோ.