இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க, லெப்டினன்ட் கேணல் ரொபேர்ட் நொக்ஸ் அவர்களை நேற்றைய தினம் சந்தித்துள்ளார்.

thalapathy

ஸ்ரீலங்காவின் புதிய இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க, அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் ரொபேர்ட் நொக்ஸ் அவர்களை நேற்றைய தினம் சந்தித்துள்ளார்.

ஸ்ரீலங்காவிற்கான அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து ரொபேர்ட் நொக்ஸ் விடைபெற்றுச் செல்லவிருப்பதனாலேயெ இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இந்த சந்திப்பின்போது, ஸ்ரீலங்கா இராணுவத்துக்கு அமெரிக்க நாடுகளில் இடம்பெறும் பயிற்சிகளில் எதிர்வரும் காலங்களில் தாமும் கலந்து கொள்வது தொடர்பாக குறிப்பிட்ட பாதுகாப்பு ஆலோசகர், இந்த பயிற்சிகளுக்கு முழுமையான ஒத்துளைப்பை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

மேலும் கடந்த நாட்களில் ஸ்ரீலங்காவிற்கு வருகை தந்த அமெரிக்க கடேற் அதிகாரிகளுக்கு ஸ்ரீலங்கா இராணுவத்தினர் வழங்கிய ஒத்துழைப்புக்களுக்கும் அவர் தனது நன்றியினைத் தெரிவித்துள்ளதோடு எதிர்வரும் காலங்களிலும் அமெரிக்காவிலிருந்து பயிற்சியின் நிமித்தம் வருபவர்களுக்கு இந்த ஒத்துழைப்பை வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை இந்தச் சந்திப்பின் போது, ஸ்ரீலங்கா இராணுவத் தளபதியினால் அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகருக்கு நினைவு சின்னம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.