இன்றைய சூழலில், கான்கிரீட் கட்டுமானங்களில் ஏற்படும் நீர்க்கசிவை தடுக்க, ‘பாலியூரித்தேன்’ அடிப்படையில் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவது புதிய அணுகுமுறையாக உள்ளது. பல நிறுவனங்கள் தங்களது கட்டுமான பணிகளில் இவ்வகை ரசாயனங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளன. கட்டுமான துறையில் முத்திரை பதிக்கும் நானோ தொழில்நுட்பம், நீர்க்கசிவு தடுப்பு, வெப்பத்தடுப்பு பணிகளுக்கும் வந்துவிட்டது. கிரீஸ் நாட்டை சேர்ந்த நிறுவனம் கட்டிடங்களில் நீர்க்கசிவு மற்றும் வெப்பத்தடுப்பு ஆகிய பணிகளுக்கான பொருட்களை அறிமுகப்படுத்தி உள்ளது. முதற்கட்டமாக, மேல் மாடியில் பூசும் ‘அடிட்டிவ் எமல்ஷன் பெயிண்டுகள்’ விற்பனைக்கு வந்துள்ளன. ‘தெர்மல் இன்சுலேஷன்’ முறையில் செயல்படும் இவை, கட்டிடங்களில் நீர்க்கசிவு மற்றும் வெப்பக்கதிர்களை தடுக்கும் திறன் பெற்றவை. மொட்டை மாடிக்கு மட்டுமல்லாது, பக்கவாட்டு சுவர்களிலும் பயன்படுத்தும் வகையில் பல்வேறு பூச்சுகள் அறிமுகமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.