ஆசியாவிலேயே சுகாதாரத்திலும் உட்கட்டுமான வசதிகளிலும் ஸ்ரீலங்கா தான் முன்னிலையில் இருப்பதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பதுளையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஸ்ரீலங்கா அரசாங்கமானது எப்பொழுதும் கல்விக்காக பாரிய தொகையை செலவிடுகின்றது. இதனால் தெற்காசிய நாடுகளில் உயர்கல்வித்துறையில் ஸ்ரீலங்கா எப்பொழுதும் முன்னணி வகிக்கின்றது.
அத்துடன் சுகாதாரம் மற்றும் உட்கட்டுமான வசதிகளில்கூட ஆசிய நாடுகளின் வரிசையில் இலங்கைதான் முன்னணி வகிக்கின்றது.
இருந்தாலும் நாம் எமது வளங்களை உரிய முறையில் பயன்படுத்துவதில்லை. இந்த நிலமையை மாற்றியமைப்பதே எமது நோக்கம் என்று மேலும் குறிப்பிட்டார்.