இந்தியாவுடனான உடன்படிக்கைகளால் இலங்கைக்கு நன்மையே

ranjith sing

 

 

 

 

 

 

இலங்கை- இந்திய உடன்படிக்கைகளால் இலங்கையில் ஆயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சத் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற இந்திய- இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் 9ஆவது பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர், ”இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே எட்கா உள்ளிட்ட பல்வேறு உடன்படிக்கைகளை ஏற்படுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால் இந்தியாவுடனான உடன்படிக்கைகள் இலங்கைக்கு பாதகமான விளைவை ஏற்படுத்தும் என சிலர் குற்றச்சாட்டு முன்வைத்து வருகின்றனர். இவ்வாறான குற்றச்சாட்டுகள் துரதிஷ்டவசமானது. இலங்கை- இந்திய உடன்படிக்கைகள் தொடர்பில் தெளிவான அறிவை பெறாத நிலையில் இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் சிலர் கூறுவது போன்று இந்தியாவுடனான உடன்படிக்கைகளால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. மாறாக இதன்மூலம் இலங்கையில் ஆயிரக்கணக்கான மறைமுக மற்றும் நேரடி வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படுவதுடன், இலங்கைக்கு பாரியளவிலான வெளிநாட்டு முதலீடுகளும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்” என்றும் குறிப்பிட்டார்.