ரூபா 30 இலட்சம் அன்பளிப்பு செய்த TEKNO MEDIA நிறுவனம்.

உங்கள் பாதுகாப்பின் முன்னோடி Tekno media நிறுவனம் யூலை மாதம் 6ம் திகதி மாலை 7:30மணியளவில் கனடா பிரம்டன் மாநகரில் அமைந்திருக்கும் Tekno media காட்ச்சி அறையில் மிகவும் அமைதியான முறையில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் யாழ்ப்பாண மாநாட்டிற்கு அன்பளிப்பாக $25000 கனடிய டாலர்கள் வழங்கினார்கள்,இலங்கைப் பணத்தில் சுமார் Rs.30 இலட்சம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அத்தோடு பிரம்டன் கற்பக வினாயகர் கோவிலுக்கு $4,000 டொலர் நிதியுதவியும், பிரம்டன் ஈழம் சாவடி நிகழ்விற்கு $5,000 டொலர்கள் நிதியுதவியும் வழங்கினார்கள்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் 6ம் திகதிகளில் யாழ்ப்பாண பல்கலைக் கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது மாநாட்டிற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் மிகவும் அவமானமாக எந்த ஒரு அரசியல் கலப்பில்லாததாக செய்து வருகின்ற இயக்கத்தின் தலைமைச் செயலக உறுப்பினர்களான திரு துரைராஜா (அகிலத் தலைவர்) திரு துரை கனேசலிங்கம் (செயளாலர் ), திரு ஆர் என். லோகேந்திரலிங்கம் (இயக்கத்தின் சர்வதேச ஊடகப் பொறுப்பாளரும்), மற்றும் திரு சிவா கணபதிப்பிள்ளை (இயக்கத்தின் வட அமெரிக்க செயற்பாடுகளுக்கு பொறுப்பாளர்) இவர்களின் கடினமான உழைப்பு பாராட்டத்தக்கது. மேற்படி மாநாட்டை யாழ்பபாணத்தில் நடத்துவதற்குரிய முழுச் செலவில் பெரும்பகுதியை அவர்களுக்கு கொடுத்துதவி எமது தாயகச் சிறார்களின் கல்வி மேம்பாட்டுக்காக தனது உழைப்பின் பெரும்பகுதியை அர்ப்பணிக்கின்றவருமான ரெக்னோ மீடியா நிறுவன அதிபர் திரு மதன் அவர்களுக்கும் அவரது துணைவியார் திருமதி தர்மினி அவர்களுக்கும் திரு. துரைராஜா அவர்கள் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றார்.

இவர்களது மனிதாபிமானம் தொடர வேண்டும் என்ரால் எமது மக்கள் அவர்களின் TEKNO MEDIA INC நிறுவனத்தையும் தமது பிள்ளைகளை போல் வளர்த்து விட வேண்டும் என்று தழிழ் சீ என் என் சார்பாக கேட்டுக் கொள்வதுடன் எமது வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம்.

1 2