எகிப்தில் பிரசவ வலியுடன் வேறொரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த பெண்ணின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எகிப்தின் Luxor நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் Mervat Mohamed Talaat என்ற பெண் மகப்பேறியல் துறையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
Talaat நிறைமாத கர்ப்பமாக இருந்த நிலையில், சம்பவத்தன்று பெண் ஒருவருக்கு பிரசவம் பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது Talaatவுக்கு திடீரென வலியும், இரத்த போக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் தனது பணியை நிறுத்தாத அவர் வலியை பொறுத்து கொண்டு அப்பெண்ணுக்கு வெற்றிகரமாக பிரசவம் பார்த்துள்ளார்.
அதன் பிறகு, பிறந்த குழந்தையை அருகிலிருந்த மருத்துவர்களிடம் கொடுத்த நிலையில், வலியால் துடித்த Talaat அருகிலிருந்த வேறு அறைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால், Talaatன் கருப்பையின் உள்ளே வளர வேண்டிய கரு வெளியில் வளர்ந்ததால் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.
மேலும் வேலை பளுவின் காரணமாகவும் அவரின் உடல்நிலை மோசமடைந்ததாக இதர மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து மருத்துவ கூட்டமைப்பின் தலைவர் Ahmed Hamza கூறுகையில், சுயநலமில்லாத Talaatன் செயலுக்காக அவர் கெளரவிக்கப்படுவார் என கூறியுள்ளார். இதுதவிர Talaatக்கு அரசு சார்பில் அங்கீகாரம் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.