இதில் எந்தெந்த இராசி காரர்கள் காதலில் கில்லாடிகள் என பார்க்கும் போது விருச்சிகம், தனசு, மீனம் தான் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.
இந்த மூன்று இராசிகள் காதல், ரொமாண்டிக், செக்சுவல் விஷயத்தில் எப்படி ஈடுபவார்கள் என இந்த கட்டுரையில் காணலாம்
விருச்சிகம்!
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் விருச்சிகம் ராசிக்காரர்கள் சற்றே அச்சத்திற்கு உரியவர்கள் தான். ஹலோ சொல்லும் போதே ஈர்க்கும் தன்மை அவர்களிடம் இருக்கிறது.
ஒருவிதமான ஹாட் தன்மை அவர்களிடம் இருக்கும். விருச்சிகம் கொஞ்சம் விசித்திரமானவர்கள், தந்திரமானவர்களும்
காதல்!
காதலை வெளிப்படுத்துவதில் விருச்சிகம் இராசிக்காரர்கள் கெட்டிக் காரர்கள். அதிலும் ரொமான்ஸ் மற்றும் செக்சுவல் விஷயங்களில் சொல்லவே வேண்டாம்.
போர் அடிக்காமல் காதல் செய்ய தெரிந்த கில்லாடிகள் விருச்சிகம் இராசிக் காரர்கள். பேச்சு வழக்கில் மட்டுமல்ல, செயலிலும் கூட.
தனுசு!
காதலை விளையாட்டாக செய்பவர்கள். இவர்களை காதலிக்கும் முன்னர், இவர்களை விரும்பும் முன்னர் சற்று நிதானமாக இருக்க வேண்டும்.
அனைவரையும் ஸ்பெஷலாக உணர செய்பவர்கள் இவர்கள். அவர்கள் ஹாய் கூறுவதை கூட பிறர் கொண்டாடலாம். ரொமாண்டிக்கில் கேலி, கிண்டல் கலந்து காதல் புன்னைகை மன்னனாக திகழ்வார்கள்.
மீனம்!
மீனம் ஒரு ஃபேண்டசியான ராசி எனலாம். இவர்கள் மிகவும் கிரியேட்டிவ் மற்றும் கனவுகள் கொண்டிருப்பர். தங்களை எப்போதும் மற்றவர்கள் ஸ்பெஷலாக உணரும்படி ஈடுபடுவார்கள்.
தனுசு ராசி போல இவர்களும் சற்று விளையாட்டு குணம் கொண்டவர்கள் தான்.
அரவணைப்பு!
எப்போதும் அரவணைப்புடன் இருப்பார்கள். மற்றவர்களை பாராட்டி மகிழ்வர். காதலிக்கவே பிறந்தவர்களாக வாழ்வார்கள். காதலி, நண்பர்கள், உறவினர், பிராணிகள் என எல்லை இல்லாமல் காதலை வெளிப்படுத்துவர்.